search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா பலி"

    ஐரோப்பாவில் ரஷியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சைத் தொடர்ந்து கொரோனாவால் 1 லட்சம் பலியைக் கடந்த 5-வது நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றுள்ளது.
    பெர்லின் :

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று உருவாகி 2 ஆண்டுகள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் 351 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 119 ஆக அதிகரித்துள்ளது.

    ஐரோப்பாவில் ரஷியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சைத் தொடர்ந்து கொரோனாவால் 1 லட்சம் பலியைக் கடந்த 5-வது நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றுள்ளது.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 75 ஆயிரத்து 961 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொரோனா தொடர்பான தரவுகளை வெளியிடும் ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அங்கு பல ஆஸ்பத்திரிகளிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் கூறுகின்றன.
    மத்தியபிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் 4½ மாத காலத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
    இந்தூர் :

    கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு, அந்த வைரஸ் தொற்று தாக்கினாலும் பெரும்பாலும் பாதிப்பு கடுமையாக இருக்காது, மரணம் நேரிடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 69 வயதான ஒருவர், 2 தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையிலும், கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

    இவர் இந்தூர் மனோரமா ராஜே டி.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் மரணம் அடைந்தார். இதை மாவட்ட தொடர்பு அதிகாரி டாக்டர் அமித் மலாக்கர் உறுதி செய்தார். உயிரிழந்தவர், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

    4½ மாத காலத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறை.
    இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில் 86 சதவீதத்தினருக்கு முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    லண்டன் :

    இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து இருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு 90 லட்சத்து 97 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்து 672 ஆக கூடி இருக்கிறது.

    அங்கு தற்போது கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9,065 ஆக உள்ளது.

    இங்கிலாந்தில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது பிரிவினரில் 86 சதவீதத்தினருக்கு முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 79 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு 2 ‘டோஸ்’ தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
    உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்குள் 50 லட்சம் பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். வேதனையான வேடிக்கையாக, ஏழை நாடுகளைவிட பணக்கார நாடுகளை இத்தொற்று அதிகம் பாதித்துள்ளது.
    வாஷிங்டன் :

    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 50 லட்சத்து 17 ஆயிரத்து 413-ஐ எட்டியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.75 கோடியை கடந்திருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக உலகையே உலுக்கியுள்ள கொரோனாவால், பாகுபாடின்றி அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும், ஏழை நாடுகளுடன் ஒப்பிடும்போது பணக்கார நாடுகளில் பாதிக்கப்பட்டோரும், இறப்பு எண்ணிக்கையும் அதிகம் என்பது வேதனையான வேடிக்கை.

    உயர் மற்றும் உயர் நடுத்தர வருவாய் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து, பிரேசில் ஆகியவற்றின் மொத்த மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 8-ல் ஒரு பங்குதான். ஆனால் உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களில் பாதி பேர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிலும் உயிரிழப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ள அமெரிக்காவில் மட்டும் 7 லட்சத்து 66 ஆயிரத்து 299 பேர் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.

    பணக்கார நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருந்ததற்கு, அங்கு மக்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் முதியவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது ஒரு காரணம். மாறாக, வளரும் மற்றும் ஏழை நாடுகளில் குழந்தைகள், இளையோரின் எண்ணிக்கையே அதிகம் என்பதால் அவர்கள் கொரோனாவின் தாக்குதலில் இருந்து பெருமளவில் தப்பிவிட்டனர்.

    இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், உலகில் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ நகரங்களின் ஜனத்தொகைக்கு இணையானது என்று தெரிவித்துள்ளது. இதய நோய்கள், பக்கவாதத்துக்கு பிறகு, உலகில் உயிர்களைப் பறித்ததில் 3-வது இடத்தை கொரோனா பிடித்துள்ளது.

    உலகத்தையே மிரட்டியே கொரோனா வைரஸ், தற்போது ரஷியா, உக்ரைன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலைகொண்டுள்ளது. அங்கு குறைவான பேருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளதும் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    ஆனால் உலகிலேயே குறைவாக தடுப்பூசி போட்ட கண்டமாக ஆப்பிரிக்கா உள்ளது. அக்கண்டத்தின் 130 கோடி பேரில் இதுவரை வெறும் 5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    ×